இந்த ஹீரோ என்னை ப்ரொபோஸ் பண்ணாரு….. உண்மையை உடைத்த நடிகை சரண்யா மோகன்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை சரண்யா மோகன். 1997 ஆம் ஆண்டு ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் 2014 ஆம் ஆண்டு காதலை தவிர வேறொன்றுமில்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான’வேலாயுதம்’ திரைப்படத்திலும் ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தின் மூலமாகவும் மிகவும் பிரபலம்அடைந்தார்.

   

.அதன் பிறகுருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.அந்த பேட்டியில் சினிமா குறித்தான பல்வேறு கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டது. குறிப்பாக திடீரென சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சரண்யா மோகன் நான் திடீரென சினிமாவில் இருந்து விலகவில்லை. திடீரென சினிமாவுக்குள் வந்து விட்டேன் என்பதுதான் உண்மை. சிலருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும்.. நிறைய சம்பாதிக்க வேண்டும்.. மிகப்பெரிய நடிகையாக வேண்டும்.. என்ற ஆசை எல்லாம் இருக்கும்.ஆனால் எனக்கு அப்படி எதுவும் கிடையாது..? எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தேன்.

மற்றபடி சினிமாவில் இந்த உச்சத்தை அடைய வேண்டும் என்ற எந்த ஆசையும் கிடையாது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்னுடைய குடும்பம் தான் எனக்கு முக்கியமானதாக இருந்தது.எனவே நான் திருமணம் செய்து கொண்டேன் மற்றபடி சினிமாவில் இருந்து திடீரென விலகி வந்துவிட்டேன் என்று ரசிகர்கள் பார்வையில் அப்படி தெரிகிறது தவிர, திடீரென சினிமாவுக்குள் வந்து விட்டேன் என்பது தான் என்னுடைய பார்வை என பதிவு செய்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து சினிமாவில் இருக்கும் பொழுது பல ரசிகர்கள் உங்கள் மீது காதல் கொண்டிருந்தார்கள். உங்கள் புகைப்படத்தை செல் போன் வால் பேப்பராக வைத்து அழகு பார்த்தார்கள்.அப்படி இருக்கும் போது.. சினிமாவில் இருந்து யாராவது உங்களுக்கு காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்களா..? திருமணம் செய்து கொள்ள ப்ரபோஸ் செய்திருக்கிறார்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சரண்யா மோகன், ம்ம்… நிறைய செய்திருக்கிறார்கள். நிறைய நடிகர்கள் நேரடியாக என்னுடைய தந்தையை தொடர்பு கொண்டு இருக்கிறார்க.ள் என்னுடைய தந்தை ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அனுப்பி விடுவார்.அதன் பிறகு தான் என்னிடம் இவர் வந்து இது போன்று கேட்டார் என்று கூறுவார். ஆனால், என்னிடம் நேரடியாகவே ஒரு ஹீரோ கேட்டார். அவர் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை.

குடும்பம், குழந்தைகள் என அவருடம் செட்டில் ஆகிவிட்டார். அந்த  Time-ல அவரோட விருப்பத்தை நியாயமான முறையில் வெளிப்படுத்தினார். அதில் தவறு எதுவும் இல்லை. இப்போது, அவரது பெயரை சொன்னால் அது தேவையில்லாத பேச்சுகளுக்கு வழி வகுத்து விடும். அதனால் அவர் பெயரை நான் கூற மாட்டேன்.அவர் கேட்ட போது, நான் மறுத்துவிட்டேன். எனக்கு என்னுடைய குடும்பமும் அவர்களுடைய மகிழ்ச்சியும் தான் முக்கியம்.

சினிமா என்பது எனக்கு இரண்டாவது விஷயம் தான் என்று சொல்லிவிட்டேன்.அதன் பிறகு வீட்டில் என்னுடைய குடும்பத்தினர் பார்த்து வைத்த மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டு தற்போது நானும் இரண்டுது குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறேன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் நடிகை சரண்யா மோகன்.