‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் நடிகர் வினோத் பாபுவின் மனைவி மற்றும் குழந்தையை பாத்துருக்கீங்களா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்…

சில வருடங்களாகவே தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது . வெள்ளித்திரை நடிகர்கள், நடிகைகளுக்கு சமமாக சின்னத்திரை நடிகர்களும் மக்கள்  மத்தியில் பிரபலமாக உள்ளனர். ஒவ்வொரு சேனல்களும் தங்களுடைய டிஆர்பிக்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது.

   

அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான டிவி என்றால் அது  விஜய் டிவி  தான்.இந்த  டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களும், நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று தான் ‘தென்றல் வந்து என்னை தொடும்’.

இந்த சீரியல் ஒளிபரப்பாகிய சிறிது நாட்களிலேயே தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டது. இந்த சீரியலில் கதாநாயகியாக அபி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்  நடிகை பவித்ரா.  கதாநாயகனாக வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர்  வினோத் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய காமெடி ஷோக்களின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இதை  தொடர்ந்து  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒலிபரப்பான நிகழ்ச்சி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைனல்ஸ் வரை சென்றார். இதன் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ஆன ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியலில் கதாநாயகனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் தற்போது ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகர் வினோத் பாபு சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.  தற்பொழுது இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…