மாடித் தோட்டம் அமைத்து விவசாயம் செய்யும் 90’ஸ் பிரபல நடிகை சீதா… என்னென்ன விவசாயம் பன்றாங்க தெரியுமா?…

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர்  ‘ஆண் பாவம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

மேலும் அவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபனுடன் “புதிய பாதை” என்ற படத்தில் இணைந்து  நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் பிறந்தனர்.  பின் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தொடர்ந்து நடிகை சீதா தனது 43 வயதில் தொலைக்காட்சி நடிகர் சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார்.

நடிகை சீதா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் மாடி தோட்டம், சமையல் குறிப்பு என பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் தனக்கு தேவையான காய்கறிகளை அவரே விவசாயம் செய்து வருகிறார்.

மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும்,வீடியோக்களையும் தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி, வைரலாக்கியும் வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Seetha PS (@seethaps67)