ஷூட்டிங் ஸ்பாட்டில் fun பண்ணும் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர்… சிரிப்பை அடக்க முடியலப்பா… இதோ fun வீடியோ….

பிரபல நடிகை லட்சுமி மகள் ஐஸ்வர்யா, தன்னுடைய அம்மாவை போலவே திரையுலகை தேர்வு செய்து 1989 ஆம் ஆண்டு, தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களை தேர்வு செய்து நடித்த இவரை, தமிழில் ‘நியாயங்கள் ஜெயிக்கும்’ படத்தின் மூலம் இயக்குனர் சிவச்சந்திரன் அறிமுகப்படுத்தினார்.

   

இதை தொடர்ந்து, பல தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தாலும், அந்த படங்கள் அனைத்தும் தோல்வியை மட்டுமே சந்தித்தது. இவருடைய வாழ்க்கையில் திருப்புமணியை ஏற்படுத்தியது என்றால் அது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘எஜமான்’ திரைப்படம் தான். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கினார் ஐஸ்வர்யா.

இவர் ஹீரோயினாக மட்டும் இன்றி, குணச்சித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார் தற்போது வரை பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தன்வீர் அஹமத் என்பவரை கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இவருக்கு அனன்யா என்கிற ஒரு மகளும் உள்ளார்.

இவர் தற்பொழுது வெள்ளி திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ‘சுகமோ தேவி’ என்கிற டிவி சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டில் டயலாக்கை கூட ஒழுங்காக செல்லாமல் இவர் சிரித்து  சிரித்து ஃபன் பண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் அவரே வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

 

View this post on Instagram

 

A post shared by Aishwariyaa (@bhaskaranaishwariyaa)