தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றும் நடிகை ராதிகா… எப்படியெல்லாம் என்ஜாய் பன்றாங்க தெரியுமா?… அவரே வெளியிட்ட வைரல் வீடியோ…

நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். இவர் 80, 90 காலகட்டங்களில் ரஜினிகாந்த், கமல்,விஜயகாந்த், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் கதாநாயகி வாய்ப்பு குறைத்தபின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் . அவர் இப்போது உள்ள இளம் தலைமுறை நடிகர்களான சூர்யா, விஜய் , விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.

   

இவர் வெள்ளித் திரையை  அடுத்து சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். இவர் ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சீரியல்களை இயக்கி தயாரித்து வருகிறார் .இவர் பல சூப்பர் ஹிட் சீரியல்களை அந்த நிறுவனத்தின் மூலம் தந்துள்ளார் .மேலும் அவர் சன் டிவி பல மெகா ஹிட் தொடர்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார்.

இவர் டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் .மேலும் இவர் படங்களில் பிஸியாகவும் நடித்து வருகிறார் . தற்பொழுது அவர் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சீரியலிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ராதிகா. இவர் தற்பொழுது தனது தோழிகளுடன் இணைந்து ஜாலியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட அழகான வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்ய இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….