மேக்கப் இல்லாமையே இவ்ளோ அழகா?… நடிகை ஜாக்குலின் வெளியிட்ட வீடியோ… வியந்து பார்க்கும் ரசிகர்கள்…

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் நடிகை ஜாக்குலின்.மற்றும்”கடைசியில் விஜய் டிவியில் சேர்ந்தார் தொகுப்பாளினி ஜாக்குலின். இவர் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் ரக்சன் உடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

   

இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதில் அவரது குரலை கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு முன்னேறினார். தொகுப்பாளியாக பணியாற்றிய இவருக்கு விஜய் டிவி சீரியலில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது. அதை தொடர்ந்து இவர் ‘தேன்மொழி பி ஏ’  சீரியலில்  கதாநாயகியாக நடித்து  பிரபலமடைந்தார்.

மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றி வந்தார்.அதன் பிறகு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் ”கோலமாவு கோகிலா”படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் சகோதரியாக நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இவர் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகும் ‘கிவி’ படத்தில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரை வெளியீட்டிற்காக தயாராகியுள்ளது. தற்பொழுது வெள்ளித்திரை , சின்னத்திரை என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஜாக்குலின்.  தற்பொழுது இவரின் மேக்கப் போடாத லுக்கில் வெளியான வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது . இதோ அந்த வைரல் வீடியோ…