தனது முதல் தமிழ் பட இசை வெளியீட்டிற்காக மனைவியுடன் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய தோனி… வெளியான மாஸ் புகைப்படங்கள்…

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2004ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 90 டெஸ்ட் 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர். இந்தியாவிற்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர்.

   

2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி (இதே தினம்) சாக்‌ஷி என்ற பெண்ணை தனது கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்துகொண்டார் தோனி. தோனி – சாக்‌ஷி தம்பதிக்கு ஸிவா என்ற பெண் குழந்தை உள்ளது. தோனிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு ஸிவா பிறந்தார்.

இவர் தற்பொழுது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். தமிழில் Lets Get married ( லெட்ஸ் கெட் மேரிட் ) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லவ் டுடே திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இவானா, கதாநாயகியாக நடிக்க தேர்வாகியுள்ளார்.

நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே தோனியை வைத்து அதர்வா என்ற நாவல் என்ற கிராபிக் நாவலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்காக தோனி தனது மனைவியுடன் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.