எனக்கு அந்த தொடர்பு இருக்கு… மனம் திறந்து… வெளிப்படையாக பேசிய ஜோதிகா…!

நடிகை ஜோதிகா, 90 மற்றும் 2000-களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். அதன்பிறகு, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார். திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபிரவேசம் செய்தார். அதிலும் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.

   

இந்நிலையில், சமீபத்தில் தொகுப்பாளர் கோபிநாத்தின் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, மலையாள திரையுலகிற்கும் எனக்கும் எங்கோ ஒரு இடத்தில் தொடர்பு இருக்கிறது. என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் பிரிய தர்ஷன் தான்.

எனக்கு தனிப்பட்ட வகையில், நான் நடித்ததில் மிகவும் பிடித்த திரைப்படம் மொழி. அத்திரைப்படத்தில் என்னுடன் நடித்திருந்த நடிகர் பிருத்திவிராஜ் மலையாளி தான். சிறிது வருட இடைவெளிக்கு பிறகு நான் நடித்த 36 வயதினிலே திரைப்படமும் மலையாள ரீமேக் தான். அதன் பிறகு மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நான் நடித்த காதல் தி கோர் திரைப்படமும் மலையாளம் தான் என்று கூறியிருக்கிறார்.