‘உன்னாலே உலகம் அழகாச்சு’… நடிகை குஷ்பூ வெளியிட்ட வீடியோ… வைரலாக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். ரஜினி ,கமல், விஜயகாந்த் ,சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

   

இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் பொழுது இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு தற்பொழுது அவந்திகா , அனந்தித்தா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஒரு கட்டத்தில் குண்டாக இருந்த குஷ்பூவும் அவரது மகள்களும் தங்களது உடல் எடையை வெகுவாக குறைத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய புகைப்படங்கள் படுவைரலானது. இவர் நடிகையாக மட்டும் இன்றி தற்பொழுது பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.

சமீபத்தில் பாஜக கட்சியின் சார்பில் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்டு இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது .அங்கு அவர் காஞ்சிபுரம் பட்டு சேலையை உடுத்தி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை குஷ்பூ. இவர் தற்பொழுது தனது கணவர் சுந்தர் சி குறித்து எமோஷனலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)