அட எப்போதும் புடவையில் கலக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணனா இது…. மாடர்ன் உடையில் வெளியான புகைப்படங்கள்….!!

நடிகை சரண்யா பொன்வண்ணன்

நடிகை சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய நாயகன் என்ற  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா 8 ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார். பின்னர்  ராம்,(2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் (2006) மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது.

   

இவருக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான பிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிடைத்த நிலையில், 2010ஆம் ஆண்டுக்கான இந்திய தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலான அவரது வாழ்க்கையில் 1 தேசிய திரைப்பட விருது , 2 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் 5 பிலிம்பேர் விருதுகள் தென்னிந்திய திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

லேட்டஸ்ட் புகைப்படம்

இந்த நிலையில் படங்களில் பிஸியாக நடிக்கும் சரண்யா பொன்வண்ணன் இன்னொரு பக்கம் ஃபேஷன் டிசைனிங் மூலம் சம்பாதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சரண்யா பொன்வண்ணன் தனது கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் வெளிநாட்டில் உலா வருவதாகவும், எப்போதும் புடவையில் நடிக்கும் சரண்யா வெளிநாட்டில் மாடர்ன் டிரெஸ்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சரண்யாவை மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் அட இவரா இது என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.