31 வருஷ உழைப்பு… மொத்தமா போச்சு… கடனுக்கு மேல் கடன்… நடிகை நீலிமாவின் வேதனை பேட்டி…!

சின்னத்திரை தொடர்களில் பிரபலமான நடிகை நீலிமா, குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். சுமார் 31 வருடங்களாக திரைத்துரையில் நடித்து வருகிறார். சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து மக்களிடையே பிரபலமான இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, தமிழ் மக்களை பொருத்தவரை நல்ல நடிகையாக வலம் வருகிறேன்.

   

எனினும் என் குடும்பத்தினரை பொறுத்த வரைக்கும், தங்க முட்டை போடும் வாத்து தான் நான். என் குடும்ப சூழ்நிலையால் தான் திரையுலகில் நடிக்க வந்தேன். என் தம்பியின் படிப்பையும்  குடும்பத்திற்கு தேவையான மொத்த செலவுகளும் நான் தான் பார்த்து வந்தேன். எனவே, 18 வயது வரை என் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பெருமை எனக்கு இருந்தது.

சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினேன். ஓய்வில்லாமல் உழைத்து அதிக பணம் சேமித்தேன். எனினும் என் தந்தையின் கெட்ட பழக்கத்தால் என் வாழ்வே தலைகீழாகி விட்டது. லட்ச கணக்கில் சம்பாதித்தேன். பல ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கும் போது தான் என் மொத்த பணமும் பறிபோய் விட்டது என்பதை உணர்ந்தேன்.

என் தந்தைக்கு, சூதாட்டத்தில் மிகவும் ஆர்வம். நான் உழைத்து சம்பாதித்த மொத்த காசையும் சூதாட்டத்தில் இழந்து உயிரையும் விட்டுவிட்டார். கையில் காசு இல்லாமல், அதிக கடன் வாங்கி என்ன செய்வது? என்று தெரியாமல் என் தாயோடு நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தேன். வாடகை வீட்டிற்கு சென்றோம்.

மீண்டும் வைராக்கியத்துடன் உழைக்க ஆரம்பித்தேன். இன்று அந்த வாடகை வீட்டையே சொந்தமாக வாங்கும் அளவிற்கு மீண்டும் வளர்ந்து வந்துவிட்டேன். எனக்கு வெளியிடங்களில் இருந்து எந்த கஷ்டங்களும் தற்போது வரை வந்தது கிடையாது. 31 வருடங்களாக திரைத்துறையில் நீடித்துக் கொண்டிருக்கும் எனக்கு என் குடும்பத்தினரே எதிரிகளாக இருப்பது தான் வேதனையை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.