விவாகரத்தை அறிவித்த விஜய் சேதுபதி பட நடிகை… அவரே வெளியிட்ட அறிவிப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்…

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நிஹாரிகா. தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹாரிகா.  நடிகையான இவர் தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்திருந்தார்.

   

இவருக்கு 2020-ம் வருடம்  ஐ.ஜி. மகன் சைதன்யாவுடன் திருமணம் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த இந்தத் திருமணத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன் உட்பட பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென நீக்கினார் நிஹாரிகா.

நிஹாரிகாவின் கணவர் சைதன்யா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பிரச்னை இருந்ததாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் டோலிவுட்டில் பேசப்பட்டது. இந்நிலையில், நடிகை நிஹாரிகா தனது விவாகரத்து குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

அதில், “நானும், சைதன்யாவும் ஒருமனதாக பிரிய முடிவு எடுத்துள்ளோம். ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. புதிய வாழ்க்கையை ஏற்றுகொள்ள தேவையான ப்ரைவசியை கொடுங்கள். புரிந்து கொண்டதற்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார். தற்பொழுது அவரின் இந்த விவாகரத்து அறிவிப்பானது தெலுங்கு சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Niharika Konidela (@niharikakonidela)