நடிகை காஜல் அகர்வாலின் தங்கையும் ஒரு பிரபல நடிகையா?… அவருக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா?…

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘பழனி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், ஓரிரு படங்களிலையே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இவர் தற்பொழுது உலகநாயகன் கமலஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

   

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள இவருக்கு நிஷா அகர்வால் என்ற தங்கை உள்ளார். தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இஷ்டம் என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் 2013-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் நிஷா அகர்வால்.

திருமணத்துக்கு பின் ஓரிரு படங்களில் நடித்து வந்த நிஷா அகர்வால், குழந்தை பிறந்த பின்னர் சுத்தமாக நடிப்புக்கு முழுக்கு போட்டார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு இஷான் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை தற்போது வளர்ந்து விட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிகையாக களமிறங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நிஷா அகர்வால். இவர் தற்பொழுது தனது மகன் மற்றும் கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.