’96’ பட ஜானு போல உடையணிந்து நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் சீரியல் நடிகை பவித்ரா… வெளியான அழகிய புகைப்படங்கள்…

விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் மீண்டும் லீட் ரோலில் கலக்கி வருகிறார் பவித்ரா ஜனனி. சென்னையில் பிறந்த இவர் ‘ஆல்பா ஆர்ட்ஸ் அண்ட்ஸ் சயின்ஸ்’ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

   

‘நம்ப வீட்டு நட்சத்திரம்’ என்று ஒரு நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தார். புதுயுகம் தொலைக்காட்சியில் உணவு மற்றும் அழகு சார்ந்த நிகழ்ச்சியையும் ஆங்கரிங் செய்திருக்கிறார். படிபடியாக தன்னை வளர்த்துக் கொண்டு விஜய் டிவியில் ஆஃபிஸ் சீரியலில் நடித்தார். மெல்ல மெல்ல வாய்ப்புகள் அவரைத் தேடி வர தொடங்கியது. ரியோ நடித்த சரவனன் மீனாட்சி தொடரில் பவித்ராவின் நடிப்பு பெரிதும் கவர்ந்திருந்தது.

அதில் துளசி கேரக்டரில் அவர் நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தது. கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என தொடர்ந்து வாய்ப்பு கிடைத்த அத்தனை சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வந்துள்ளார். வாழ்க்கையில் எது வந்தாலும் அதை சந்தித்துக்கொள்ளலாம் என எப்போதும் பாஸிட்டிவ் வாக யோசிப்பவர் பவித்ரா.

சிறிய வேடமாக இருந்தாலும் தனக்கு தரப்படும் கேரக்டேரில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வந்துள்ளார். பிறகு ராஜா ராணி சீரியலில் நெகடிவ் ரோலில் நடிக்க வந்த வாய்ப்பையும் விடாமல் ஏற்றுக்கொண்டு அதிலும் தனது திறமையை காட்டியுள்ளார்.

தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது தனது நண்பர்களுடன் இணைந்து ட்ரிப் சென்ற புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.