விஜய் டிவி ‘நீயா நானா’ நிகழ்ச்சிக்காக இரண்டு கெட்டப்புகளில் தயாரான சூப்பர் சிங்கர் பிரபலத்தின் மனைவி…  இதோ அழகிய புகைப்படங்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பல வருடங்களாக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது ‘சூப்பர் சிங்கர்’ மட்டுமே. இது ஜூனியர், சீனியர் என்று இருபிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெள்ளி திரைக்கு சென்ற பாடகர்கள் ஏராளம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது.

   

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவை பெற்றவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை பாடி அனைவரையும் அசர  வைத்துள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர். இந்த நிகழ்ச்சி மூலம் தான் அஜய் கிருஷ்ணா மீடியாவுக்குள் நுழைந்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல படங்களில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் பிரபல பாடகராக ஜொலித்துக் கொண்டுள்ளார்.அஜய் கிருஷ்ணா தான் பல வருடங்களாக காதலித்து வந்த ஜெசி  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அஜய் கிருஷ்ணாவின் மனைவி  ஜெசி கர்ப்பமாகி சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஜெசி.

இவர் சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ‘long hair vs short hair ‘ என்ற தலைப்பில் நடைபெற்ற நீயா நானாவில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்பொழுது இணையத்தில் பகிர இப்புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.