தென்னிந்திய சினிமாவில் 1980 களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ராதா. இவர் நடித்த பெரும்பாலான படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். இவர் நடிக்க வந்த ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்ததுடன் 10 வருடங்களில் 162 படங்களில் நடித்து மாபெரும் சாதனை படைத்தவர்.
இந்த சாதனை இந்திய அளவில் எந்த ஒரு நடிகையும் இதுவரை செய்திடாத சாதனையாகும். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் என அனைவரிடமும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்படி பிசியான நடிகையாக சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு பிசினஸ் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.
அதன் பிறகு சினிமாவை ஓரம் கட்டி எந்த ஒரு படத்திலும் நடிக்க வரவில்லை. சமீபகாலமாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி கார்த்திகா, துளசி மற்றும் விக்னேஷ் என்ற இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களில் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அவரின் மகன் விக்னேஷ் இதுவரை சினிமா பக்கமே வரவில்லை.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராதா அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது நடிகை ராதா 25 வருடங்களுக்கு பிறகு தனது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்று உள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.