வெளிநாட்டில் ஊர் சுற்றும் நடிகை ராதிகா மற்றும் நடிகை ஸ்ரீப்ரியா… நெருங்கிய தோழிகளின் வைரல் வீடியோ…

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், நடிகர் கமலஹாசனுடன் 28-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் என நடித்து அசத்தியவர். நடிகை ஸ்ரீதேவிக்கு போட்டியாக திரையுலகில் நடித்தவர் ஸ்ரீபிரியா.

   

இவர் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை 1988ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாகார்ஜுன் மற்றும் சினேகா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் மேல் நடித்து அசத்தியவர் நடிகை ஸ்ரீபிரியா.

 

சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கி வந்த இவர் இப்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். பொதுவாக ஒரு சிலருக்கு திறமைகள் என்பது அசாத்தியமாக இருக்கும். அந்த வகையில் ஒரு நபராக தான் நடிகை ஸ்ரீப்ரியா இருந்திருக்கிறார். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக, இயக்குனராகவும், குரல் கலைஞராகவும் பல முகங்களை வெளிக்காட்டி அதிலும் ஜெயிக்கவும் செய்து இருக்கிறார்.

திரைப்படங்களில் கம்பீரமான கேரக்டராக நடித்து வந்த ஸ்ரீப்ரியா சின்ன திரையில் அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 1 மற்றும் இரண்டில் இவருடைய கலகலான காமெடி இவருடைய இன்னொரு முகத்தை வெளிக்கொண்டு வந்து, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சி இப்போதும் பல 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருக்கிறது.

இவர் 2014 ஆம் ஆண்டு வெளிவயான “திருஷ்யம்” திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.  அதற்கு பிறகு எந்த திரைப்படங்களிலும் இவரை காணவில்லை.  இவர் தற்பொழுது தனது  நடிகை ராதிகா சரத்குமார் உடன் வெளிநாட்டில் ஊர் சுற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…