நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். இவர் 80, 90 காலகட்டங்களில் ரஜினிகாந்த், கமல்,விஜயகாந்த், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் கதாநாயகி வாய்ப்பு குறைத்தபின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் . அவர் இப்போது உள்ள இளம் தலைமுறை நடிகர்களான சூர்யா, விஜய் , விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.
இவர் வெள்ளித் திரையை அடுத்து சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். இவர் ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சீரியல்களை இயக்கி தயாரித்து வருகிறார் .இவர் பல சூப்பர் ஹிட் சீரியல்களை அந்த நிறுவனத்தின் மூலம் தந்துள்ளார் .மேலும் அவர் சன் டிவி பல மெகா ஹிட் தொடர்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார்.
இவர் டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் .மேலும் இவர் படங்களில் பிஸியாகவும் நடித்து வருகிறார் . தற்பொழுது அவர் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சீரியலிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை ராதிகா கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற நிலையில் அங்கே அவரைப் பார்த்த அவருடைய தீவிரமான ரசிகை ஒருவர் ஓடி வந்து அவரிடம் அனுமதி கேட்காமல் அவர் தோள்மேல் கை போட்டு போட்டோ எடுக்க முயற்சித்து இருக்கிறார். உடனே இவர் திரும்பி பார்த்து முறைத்ததும் அருகில் இருந்த பவுசர்கள் ‘Don’t touch, Don’t touch’ என்று சத்தம் போடுகின்றனர். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.