‘அறந்தாங்கி நிஷா நீங்க சைக்கிளை ஓட்டுறீங்களா?… இல்ல உருட்டுறீங்களா?’… இணையத்தை  கலக்கும் வீடியோ…

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரைப்போல விஜய் தொலைக்காட்சியில் பிரபலமானார் ஏராளம். அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நிஷா.

   

கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இன்று சினிமாவில் நடிக்கும் அளவிற்கு பேரும், புகழும் பெற்றுள்ளார் அறந்தாங்கி நிஷா. கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பழனி என்பவருடன் சேர்ந்து நிஷா செய்த காமெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை.

இந்த கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து சின்னத்திரையில் பிரபலமான இவர் தற்பொழுது வெள்ளி திரையிலும் கால் பதித்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். அறந்தாங்கி நிஷா ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தற்பொழுது ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது .சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்பொழுது தனது கணவருடன் சைக்கிளை உருட்டி செல்லும் காமெடியான வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)