சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாதஸ்வரம் தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரித்திகா. மேலும் கல்யாண பரிசு, குலதெய்வம் ஆகிய தொடர்களிலும் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார். அதோடு மட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனுஷ் நடித்து வெளிவந்த வேங்கை படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன்பின் மதுரை டூ தேனி எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஸ்ரித்திகாவிற்க்கு வெள்ளித்திரையில் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் 2019ல் சனீஷ் என்பவரைதிருமணம் செய்து கொண்டார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்ரித்திகா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவானது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram