நம்ம ஜி பி முத்துவா இது?… துபாயில என்ன செய்றீங்க?… வீடியோவை பார்த்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 21 போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்டவர் ஜி பி முத்து. இவர் சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானவர். இவர் தன்னுடைய எதார்த்தமான பேச்சினால் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

   

இணையத்தில் கிடைத்த பிரபலம் மூலமாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டின் முதல் நாள் அன்றே கமலஹாசன் உடன் இவருடைய விவாதங்கள் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. இதை தொடர்ந்து இவர் பிக் பாஸ் வீட்டில் தனது ஒரிஜினல் முகத்தையே காத்துக் கொண்டிருந்தார். ஒருபொழுதும் நடிக்கவில்லை.

 

இவர் தன்னுடைய குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு தானாகவே வெளியேறினார். 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்பொழுது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலமாக பல படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார்.

அவ்வப்போது தனது youtube பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களையும்  உற்சாகப்படுத்தி வருகிறார்.  இந்நிலையில் வெள்ளித்திரையில் பிசியாக இருக்கும் ஜி பி முத்து தற்பொழுது துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Muthu Kumaran (@naan_muthukumaran)