என்னால தான் சூப்பர்ஸ்டார் படமே வெற்றி பெற்றது.. தலைகால் புரியாமல் ஆடும் தமன்னா.. ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய சம்பவம்..!

நடிகை தமன்னா தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார். அவரின் தங்க நிற மேனிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கிக் கொண்டிருந்த அவர் சமீப வருடங்களில் பெரிய அளவில் வெற்றி படங்களில் நடிக்கவில்லை.

   

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயிலர் திரைப்படத்தில் காவலா பாடலுக்கு நடனம் ஆடி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டி தொட்டி எங்கும் அந்த நடனம் பெயர் பெற்றது. இணையதளங்களில் அவரின் நடன வீடியோக்கள் தான் கலக்கிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் நடிகை தமன்னா ஜெயிலர் திரைப்படத்திற்கு முன்பு ஒன்றரை கோடி வரை சம்பளம் பெற்று வந்ததாகவும், அத்திரைப்படத்திற்கு பிறகு 5 கோடி சம்பளம் கேட்பதாகவும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு நான் தான் காரணம் என்றும் தமன்னா கூறுவதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.