ரஜினியின் மருமகளாகும் அரிய வாய்ப்பு… உதறி தள்ளிய பிரபல சீரியல் நடிகை.. ஏன் தெரியுமா..? வெளியான தகவல்..!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. அத்திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக மிர்ணா என்ற மலையாள நடிகை நடித்திருந்தார்.

   

ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. மேலும், தற்போது வரை அவர் ரசிகர்களால் ரஜினியின் மருமகள் என்று தான் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், அத்திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகள் கதாபாத்திரத்தில் நடிக்க முதன் முதலில் பிரபல சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டியை  தான் இயக்குனர் நெல்சன் அணுகியுள்ளார்.

எனினும் தவிர்க்க முடியாத சில காரணங்களால், அவர் அந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இந்த கதாபாத்திரத்தில் மட்டும் அவர் நடித்திருந்தால் தற்போது வெள்ளி திரையில் வாய்ப்புகள் அதிகம் கிடைத்திருக்கும். அவரின் லெவலே மாறி இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.