‘நான்’ திரைப்படத்தில் நடித்த நடிகையா இவர்?… இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா?… வைரல் புகைப்படம்… இதோ பாருங்க…

நடிகை விபா நடராஜன் 2011ல் கன்னடத்தில் வெளியான ‘ஆத்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். சென்னையில் பிறந்த இவர் சென்னையிலும், பெங்களூரிலும் தனது பள்ளி படிப்பை நிறைவு செய்தார்.

   

இவர் ஒரு சுற்றுலா மற்றும் சுற்றுலா பிரிவு இளங்கலை பட்டதாரி. மேலும் நடிகர் அரவிந்த்சாமி இவரின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதை தொடர்ந்து இவரின் இரண்டாவது படம் தமிழில் வெளிவந்த காதல் படமான ‘லீலை’.

இப்படத்தின் பெரும் பகுதி 2018ல் படமாக்கப்பட்டிருந்தாலும், படம் 2022ல் தான் வெளியானது. இத்திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை விபா நடராஜன்.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’ திரைப்படம் தான்.

இத்திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் அவர் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் அழகு தேவதையாக பதிந்து விட்டார் என்றே கூறலாம். இதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர், தற்பொழுது பட வாய்ப்புகளின்றி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை விபா  நடராஜன். இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நான் படத்தில் நடித்த நடிகையா இவர்?’ இன்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.