பிக் பாஸ் நிகழ்ச்சி
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க உள்ளது. கடந்த 2017 முதல் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது 6-வது சீசன் முடிந்து, 7-வது சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
அந்த வகையில் இன்று தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய நிலையில், வழக்கம் போல நாகர்ஜுனா போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி இருக்கிறார்.
ஷகீலா
அந்த வகையில் தற்போது 90ஸ் காலத்தில் கவர்ச்சி புயல் நடிகையாக இருந்த நடிகை ஷகீலா, பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர், பிக் பாஸ் தமிழ் ஷோவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இவர் தற்போது தெலுங்கு பிக் பாஸ் ஷோவுக்குள் சென்று இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், தமிழ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.