மீண்டும் தந்தையான பிக் பாஸ் ஆரி… என்ன குழந்தை தெரியுமா?… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆரி.
இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி என்ற சங்கரின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

   

அதனைத் தொடர்ந்து இவர் நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் படங்களில் கிடைத்த பிரபலத்தை விட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். பிக் பாஸ் சீசன் 4ல்   18 போட்டியாளர்களின் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர்.

முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.நடிகர் ஆரி சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார்.

பிக் பாஸ் ஆரிக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். அவர் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகர் ஆரிக்கு மீண்டும் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த ஆரியின் மனைவி தற்பொழுது ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்பொழுது நடிகர் ஆரிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.