பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுஜித்ராவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது.

   

தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி.

இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது.

வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

தற்போது அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்கியா என்கின்ற நடிகை சுசித்ரா.

கன்னட சினிமாவில் நடித்து பிரபலமான இவர் தற்போது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.

இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

அவர் தனது மகளுடன் மகாபலிபுரத்தில் அண்மையில் சுற்றுலா சென்றுள்ளார்.

இவர் சமீபத்தில் சென்னையில் புதிய வீட்டைக் கட்டி சென்ற நிலையில் அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

அதுமட்டுமல்லாமல் தனது மகன் மற்றும் மகளுடன் இவர் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

தற்போது சுஜித்ராவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.