இயக்குனர் மாரி செல்வராஜுக்கு அடித்த ஜாக்பாட்… ‘மாமன்னன்’ வெற்றியை கொண்டாட விலை உயர்ந்த பரிசு கொடுத்த உதயநிதி… 

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் மாரி  செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து ‘மாமன்னன்’ திரைப்படம் ரிலீஸாகி உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில் ,கீர்த்தி சுரேஷ் என முன்னணி நட்சத்திரங்கள் பலர்  நடித்துள்ளனர்.

   

 

இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தற்பொழுது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்’ மாமன்னன்’ தான் தனது கடைசி படம் எனக்கு அறிவித்துவிட்டார். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது . தற்பொழுது இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த ரசிகர்களை கவர்ந்த வடிவேலு தற்போது மாமன்னன் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வடிவேலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 17 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் மாமன்னன் திரைப்பட வெற்றியை கொண்டாட இயக்குனர் மாரி செல்வராஜூக்கு உதயநிதி மினி கூப்பர் கார் ஒன்றை வாங்கி பரிசளித்திருக்கிறார். அதன் விலையே கிட்டத்தட்ட 40 முதல் 45 லட்சம் வரை இருக்கும். இப்படி ஒரு விலை உயர்ந்த பரிசை உதயநிதி, மாரி செல்வராஜுக்கு கொடுத்து மாமன்னன் குறித்த தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.