தளபதியின் ‘லியோ’ பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட டிஜே ப்ளாக் … கூட ஆடுறவங்க யாருன்னு தெரியுதா?…

விஜய் டிவியின்  கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியலில் நடித்து பிரபலமானவர் சாய் பிரமோதித்தா . இந்த சீரியல்  இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்த சீரியல் இயக்குனருமான பிரவீன் பெண்ணெட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

பிரவீன் பெண்ணெட் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல்கள் ஆனா ராஜா ராணி முதல் பாரதி கண்ணம்மா சீரியல் வரை பல சீரியல்களை இயக்கியுள்ளார். தற்பொழுது இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சியில் பல கவுண்டர்களை போட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் டிஜே பிளாக்.

குறிப்பாக சீசன் 9 இல் மட்டும் இவர் மிகப் பிரபலம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவரையும் பூஜாவையும் வைத்து இந்த சீசனையே ஒரு ரகளை செய்து விட்டனர் ஆங்கர்களான  மாகாபா மற்றும் பிரியங்கா.

தற்பொழுது இணையத்தில் பிரபலங்களும், ரசிகர்களும் தளபதியின் லியோ திரைப்பட நா ரெடி பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகின்றனர்.  அந்தவகையில் சாய் பிரமோதிதாவும், டிஜிபிளாக்கும் இணைந்து தளபதியின் லியோ பட பாடலுக்கு செம டான்ஸ் ஆடியோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sai Pramoditha (@saipramoditha)