நடிகை பிரியா ஆனந்தின் சொத்து மதிப்பு என்னனு  தெரியுமா?.. அடேங்கப்பா இத்தன கோடியா!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் சமீபத்தில் தனது  37 வது பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை பிரியா ஆனந்த், சென்னை மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வளர்ந்ததால், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவர்.

   

நடிகை பிரியா ஆனந்த் ‘வாமனன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து இவர் புகைப்படம், 180, எதிர்நீச்சல் போன்ற பல படங்களில் நடித்திருந்தால் நடித்திருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த ‘எதிர் நீச்சல்’ திரைப்படம் பிரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை அமைத்து தந்தது.

இதைத்தொடர்ந்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன், LKG, ஆதித்ய வர்மா என படங்கள் பிஸியாக நடித்தார் வந்தார் .இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,  போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது பிரியா ஆனந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

மேலும், அந்தகன், சுமோ என தமிழ் படத்திலும் கன்னடப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பிரியா ஆனந்த் ரூ.11 கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை பிரியா ஆனந்த் லியோ படத்திற்காக 80 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பின் அவரது சம்பளம்  அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.