நடிகர் விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா?… சர்ச்சையில் சிக்கிய பிரபல ஜோடி… முற்றுப்புள்ளி வைத்து வெளியான தகவல் இதோ…

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து பெற போவதாக தற்போது இணையத்தில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது ‘வாரிசு’ திரைப்படம் உருவாகி பொங்கலுக்கு ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இதை தொடர்ந்து  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் விஜய். வாரிசு திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியானது தான்  விவாகரத்து சர்ச்சை.

   

 

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்படுவர்கள் தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா. இவர்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபல ஜோடி என்று கூறலாம். நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவரது மனைவி சங்கீதா எப்பொழுதும் கலந்து கொள்வார். இந்நிலையில் தற்பொழுது இவர் அட்லி பிரியா சிமந்தம் மற்றும் வாரிசு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து சங்கீதா வராததால் இவர்களது 22 வருட திருமண வாழ்க்கை விவாகரத்து பெற்று முடிவடையப் போகிறதா என்று இணையத்தில் நெட்டிஷன்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்பொழுது தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது தளபதி விஜயின் மனைவி சங்கீதா தனது மகன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் உள்ளாராம். இதனால் தான் விஜய் சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இத்தகவலின் மூலம் இந்த விவாகரத்து சர்ச்சைக்கு தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.