தமிழர் கலாச்சாரத்தை இழிவுப்படுத்துவதா…? விராட் கோலிக்கு குவியும் கண்டனம்… பிரபலத்தின் வீடியோவால் எழுந்த சர்ச்சை…!

இந்திய கிரிக்கெட் அணியில் ரன் குவிக்கும் இயந்திரம் என்று அழைக்கப்படும் விராட் கோலி உலகக்கோப்பை தொடர் முழுவதும் தன் சிறப்பான ஆட்டத்தினால் ரசிகர்களை உற்சாகமடைய செய்தார். விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் அவரை ஏராளமானோர் பின்தொடர்கிறார்கள்.

புகழின் உச்சியில் இருக்கும் விராட் கோலிக்கு கொல்கத்தா, புதுடெல்லி மற்றும் புனே போன்ற இடங்களில் One8 Commune என்ற பெயரில் சொந்தமாக ஹோட்டல்கள் இருக்கிறது. சமீபத்தில் இந்த ஓட்டலின் மற்றொரு கிளை மும்பையில் திறக்கப்பட்டது. இந்த ஓட்டலுக்கு மதுரையை சேர்ந்த ராம் என்பவர் சென்று இருக்கிறார். இவர் தமிழில் ராப் பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடும் வீடியோக்களில் வேஷ்டி சட்டை தான் அணிந்திருப்பார்.

   

இந்நிலையில், வேஷ்டி சட்டையில் விராட் கோலியின் ஓட்டலுக்கு சென்ற காரணத்தால் அவரை உள்ளே விடவில்லை. மேலும், வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு வந்தால் அனுமதி கிடையாது என்று ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பசியுடன் சாப்பிட சென்ற அவர் ஏமாற்றமடைந்தார்.

உடனே, ஹோட்டலின் முன்பு நின்று தனக்கு நேர்ந்த சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டார். மேலும், அவர் பசியோடு சாப்பிட வந்த என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. மனதிற்கு கஷ்டமாக உள்ளது. வருத்தத்தோடு செல்கிறேன் என்று கூறியிருந்தார்.

அந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் தமிழர்களின் கலாச்சார உடையை உள்ளே அனுமதிக்காததை  ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சித்து வருகிறார்கள். மேலும், சிலர் விராட் கோலி இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.