“அம்மா என் முகவரி நீ அம்மா”என்று தன் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன்… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர் சென்னை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை சிவக்கொழுந்து ஒரு காவல்துறை அதிகாரி  தாய் மீனா குமாரி காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார்.

   

இவர் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் படித்தார், பின்னர் ஐஐடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.2012 ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து நானும் ரவுடிதான்,  தானா சேர்ந்த கூட்டம் , பாவ கதைகள்,  காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை  இயக்கியுள்ளார். இவர் நெற்றிக்கண்,  கூலாங்கல் , ராக்கி இணைக்கவும் போன்ற படங்கள் இவர்  தயாரிப்பில் வெளியானது.

இவர் என்னை அறிந்தால்,   மாரி,  நானும் ரவுடிதான்,  ரெமோ,  தானா சேர்ந்த கூட்டம்,  கோலமாவு கோகிலா,  குரு,  வலிமை,  தாதா,  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் பாடல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர்  அம்மாவின்  பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அம்மா உடன்  எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போதுஇந்த  புகைப்படமானது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.