பிரபல வில்லன் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு குழந்தை பிறந்திருச்சா?… அச்சச்சோ…. அந்த குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனையா?… அவரே வெளியிட்ட வைரல் பதிவு இதோ…

பிரபல வில்லன் நடிகர் ஆர் கே சுரேஷ் தனக்கு குழந்தை பிறந்ததாகவும் மேலும் அந்த குழந்தைக்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளதாகவும் தற்பொழுது பதிவு ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் ஆர். கே. சுரேஷ். இவருக்கு தயாரிப்பாளர் மது உடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமானது. இதை அடுத்து ஆர்கே சுரேஷ் மது தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் இஷார்யா சுரேஷ்.

   

இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்த அவரது மனைவிக்கு சமீபத்தில்  வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் தன் குழந்தைக்கு ஒரு பிரச்சனை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது குழந்தைக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை உள்ளதாக கூறியிருக்கும் அவர் தன் குழந்தைக்காக அனைவரும் வேண்டிக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வைரலாகும் அந்த பதிவு இதோ .,..