ப்ரஸ்ட் பார்ட் செம்ம ஹிட்.. ஆனால் இரண்டாம் பாகம் செம்ம சொதப்பல்.. என்னனென்ன படங்கள் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறுவதில்லை ஒரு சில படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு  பெற்றுள்ளது. அதில் முதல் பாகம் மக்கள் மிகுந்த வரவேற்பு பெற்று. அப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி  ரசிகர்கள் வைத்த  எதிர்பார்பை இடு செய்ய முடியாமல் போன  திரைப்படங்களை பற்றி இதில் காண்போம்.

1.பில்லா2:

   

இயக்குனர் சக்ரி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம்’ பில்லா2′. இப்படத்தில் அஜித் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா,  பிரபு,  கணேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

2.சாமி 2:

இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சாமி 2’. இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ்,  பிரபு,  பாபி சிம்ஹா, ஜான்விஜய்,  சூரி,  ஐஸ்வர்யா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3.விஸ்வரூபம் 2:

கமலஹாசன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘விஸ்வரூபம் 2’. இப்படத்தில் கமலஹாசன், ராகுல் போஸ்,  பூஜா குமார் , ஆன்ட்ரியா,  சேகர் கபூர், போன்ற  பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் முகமது இசையமைத்துள்ளார்.

4.வேலையில்லா பட்டதாரி 2:

இயக்குனர் சௌந்தர்யா இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இப்படத்தில் தனுஷ்,  கஜோல்,  அமலா பால், விவேக்,  சமுத்திரக்கனி,  சரண்யா பொன்வண்ணன் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

5.வெண்ணிலா கபடி குழு 2:

இயக்குனர் செல்வசேகர்  இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வெண்ணிலா கபடி குழு 2’. இப்படத்தில் விக்ராந்த், பசுபதி,  சூரி,  கிஷோர் ,  போன்ற பல பிரபலங்கள்  நடித்துள்ளனர்.  செல்வகணேஷ் இசை அமைத்துள்ளார்.

6.பொன்னியின் செல்வன் 2:

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2.’ இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக்,  திரிஷா,  ஐஸ்வர்யா,  பிரபு,  சரத்குமார்,  நிழல்கள் ரவி, சாரா அர்ஜுன், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

7.மாரி 2:

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. இப்படத்தில் தனுஷ், கிருஷ்ணா, ரோபோ சங்கர்,  சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் போன்ற பல பிரபலங்கள்  நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

8.சண்டக்கோழி 2:

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சண்டக்கோழி 2’. இப்படத்தில் விஷால்,  வரலட்சுமி,  கீர்த்தி சுரேஷ்,  ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள். நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

9.தேவி 2 :

ஏ எல் விஜய் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தேவி 2’. இப்படத்தில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா,  நந்திதா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

10.நான் அவன் இல்லை 2:

இயக்குனர் செல்வா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நான் அவன் இல்லை 2’. இப்படத்தில் ஜீவன்,  சங்கீதா,  லட்சுமி ராய்,  சுவேதா மேனன், மயில் சாமி, போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.