
நகைச்சுவை மன்னனாக வலம் வந்த நடிகர் கவுண்டமணி முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தால் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு கவுண்டர்களை போடுவார். அந்த அளவிற்கு நகைச்சுவையில் உச்சம் தொட்டவர் என்றே கூறலாம். இந்நிலையில், கவுண்டமணி என்ற பெயர் அவருக்கு வந்த கதை குறித்து இயக்குனர் பாக்யராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, ஒரு படத்தின் டைட்டிலில் எழுதுவதற்கு, கவுண்டமணி என்று நான் எழுதி கொடுத்து விட்டேன். என் காதில் அப்படி தான் கேட்டது. அதன் பிறகு, தான் கூறினார்கள் அவர் பெயர் கவுண்டர் மணி. நாடகங்களில் நடிக்கும் போது தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் திணறும் அளவிற்கு கவுண்டர்களை போட்டு விடுவார்.
திடீரென்று நடித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த சமயத்திற்கு ஏற்றவாறு கவுண்டர்களை பேசுவதில் அவர் கில்லாடி. எனவே, தான் அவர் பெயர் கவுண்டர் மணி என்று கூறினார்கள். அதன் பிறகு தான் எனக்கு தெரிந்தது. அதற்குள் படத்தின் டைட்டிலில் அவர் பெயரை கவுண்டமணி என்று போட்டுவிட்டார்கள். அந்த பெயர் அப்படியே வழங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்.