செத்த பயலே! நார பயலே!… என் பொண்டாட்டி கூட ரீல்ஸ் போட்டா தங்கச்சின்னா சொல்றீங்க… குமுறும் ஜி பி முத்து… ட்ரெண்டாகும் வீடியோ…

பிக் பாஸ் சீசன் 6ல்  களம் இறங்கிய 21 போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர் டிக் டாக்  பிரபலமான ஜி பி முத்து. இவர் தனது எதார்த்தமான பேச்சினால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். டிக் டாக் ஜி பி முத்து ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதன் மூலம் பிரபலமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

   

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. இறுதிவரை இருந்து கோப்பையை வெல்வார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வெறும் 14 நாட்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். எனக்கு பணம் புகழை விட பாசம் தான் முக்கியம் என்று கூறி மகனை காண்பதற்காக வேண்டி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜி பி முத்து.

முதல் வாரத்தில் வீட்டின் தலைவராக பொறுப்பேற்ற இவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதை தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர், திடீரென்று வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.  தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார்.

தற்பொழுது ஜிபி முத்து வெள்ளித்திரை, சின்னத்திரை என பிஸியாக வலம் வந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஜி பி முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும்,  வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஜி பி முத்துவின் மனைவியை அவரது தங்கை என கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by GPMuthu 24 ???? (@1gpmuthu)