‘கல்யாணமான முதல் நாள் மறக்கவே முடியாது’ … ‘எதிர்நீச்சல்’ சீரியல் குணசேகரன் வெளியிட்ட வைரல் புகைப்படம்… 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் ‘குணசேகரன்’ என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மாரிமுத்து.இவர் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

   

கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ‘யுத்தம் செய்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறந்த இவர் தற்பொழுது சின்ன திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் வில்லனாக மிரட்டி வருகிறார். தான் அறிமுகமான முதல் சீரியலிலேயே நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம்  ‘குணசேகரன்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவின் இயல்பான நடிப்பே என்று பலரும் கூறுகின்றனர். இந்த சீரியலில் அவர் தனது வில்லத்தனமான நடிப்பை எதார்த்தமாக காட்டியுள்ளார் குணசேகரன்.

மேலும் இவர் தன் தம்பிகளையும் தன் பேச்சை தட்டாமல் கேட்கும்படி நடத்திவருகிறார். குடும்பத்திற்கு வாழ வந்த பெண்களையும் அடிமைப்படுத்தி வருகின்றார்.சீரியலில் வில்லனாக நடித்து வரும் இவர்  நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் அவர் தன் குடும்பத்தினருடன் மிக பாசமாக நடந்து கொள்ளக் கூடியவர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் மாரிமுத்து. இவர் தற்பொழுது ‘தனக்கு கல்யாணமான முதல் நாளை மறக்கவே முடியாது என்றும், அன்று மொட்டை மாடியில் தன் மனைவியுடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படத்தையும்’ பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காண்பித்து மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Adithya TV (@adithyatv)