கௌதமியும் அவரது மகளும் எடுத்துக் கொண்ட புகைப்படம்….! அழகில் அம்மாவை மிஞ்சிய மகள்… லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்..

நடிகை கௌதமியும் அவரின் மகளும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

1998 ஆம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கௌதமி.

அதன் பிறகு எங்க ஊரு காவலன், ரத்ததானம், நம்ம ஊரு நாயகன் உள்ளிட்ட பல ஹிட்டு திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

80s களின் முன்னணி நடிகையாக இருந்த கௌதமி ரஜினிகாந்த், கமலஹாசன், ராமராஜன், பிரபு, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

நடிகை கௌதமி 1998 ஆம் ஆண்டு சந்திப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ஒரு சில வருடங்களில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.

இவர் கடைசியாக தமிழில் கமலஹாசன் உடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் கமலஹாசனும் கௌதமியும் லிவிங் டுகெதர் முறையில் கிட்டதட்ட 10 வருடங்கள் வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் கௌதமி தனது முதல் கணவருக்கு பிறந்த குழந்தையுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.

கௌதமியின் மகள் சுப்புலட்சுமி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பகிர்ந்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அம்மா மகள் போல் இல்லை அக்கா தங்கை போல் இருக்கிறீர்கள் என்று கூறி வருகிறார்கள்.