சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 4 ஸ்பூர்தியா இது?… மளமளன்னு இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களே… லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

   

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாளடைவில் மிகப் பிரபலமாகி விடுகின்றனர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மிக வேகமாக காலடி எடுத்து வைத்து விடுகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஸ்பூர்தி .

2014 இல் நடைபெற்ற இந்த சீசன் 4 நிகழ்ச்சியில் ஜூனியர் பிரிவில்  9 வயதான ஸ்பூர்த்தி கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.

இவர் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர். சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு எஸ் பி பி முதல் ஏ ஆர் ரகுமான் வரை அனைவரையும் தன் காந்த குரலால் கவர்ந்தார்.

தற்பொழுது இவர் கர்நாடக சங்கீதத்தை முழுமையாக பயின்று வந்து கொண்டுள்ளார். மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஸ்பூர்த்தி.

இந்நிலையில் 18 வயதாகும் ஸ்பூர்த்தி அவ்வப்போது தனது புகைப்படங்களையும் பாடல் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் பகிர்ந்த வீடியோக்களையும், புகைப்படத்தையும் பார்த்த ரசிகர்கள் ‘சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியா இவர்? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.