‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் பகத் பாசிலின் சம்பளம் இத்தனை கோடியா?… அம்மாடி தலையே சுத்துதே!….

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் மாரி  செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து ‘மாமன்னன்’ திரைப்படம் ரிலீஸாகி உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில் ,கீர்த்தி சுரேஷ் என முன்னணி நட்சத்திரங்கள் பலர்  நடித்துள்ளனர்.

   

இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தற்பொழுது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்’ மாமன்னன்’ தான் தனது கடைசி படம் என அறிவித்துவிட்டார்.

இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது . தற்பொழுது இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது. ரிலீசான இரண்டே நாட்களில் 17 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது மாமன்னன் திரைப்படம். மேலும் வசூல் அதிகரிக்கும் எனவும் எத்திராபர்க்கப்படுகிறது.

மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் அனைவராலும் பாராட்டப்பட்ட நடிகர் ஃபகத் ஃபாசில். ஏனென்றால் அனைவரையும் மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் ஃபகத் ஃபாசில் ரூ. 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக வாங்கியிருப்பார் என்ற தகவல் தற்பொழுது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.