‘பிகில்’ பாண்டியம்மா தனது காதலருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள்… செம கியூட் ஜோடி….

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ சங்கர்.இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

   

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறினார். முதன்முதலாக ஜீவாவின் ரௌத்திரம் திரைப்படத்தில் ரோபோ சங்கர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவரின் மகள் இந்திரஜா சங்கரும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் விஜய் உடன் பிகில், கார்த்தி உடன் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது மகளான இந்திரஜா ஷங்கர் டாக்டர் தொடர்வோம் கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சை கொடி காட்டவே இருவரும் சுதந்திர காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். தற்பொழுது அவரின் காதலரான கார்த்திக், இந்திரஜாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.