நடிகர் சிவகார்திகேயனா இது?… தனது அக்கா உடன் சிறுவயதில் எப்படி இருக்கார் தெரியுமா?… இந்த போட்டோவுல இன்னொரு ஸ்பேஷலும் இருக்கு…

தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நம்ம வீட்டு பிள்ளையாக நடித்திருந்த சிவகார்த்திகேயனுக்கு மக்கள் தங்களது ஏகபோக வரவேற்பை கொடுத்தனர்.

   

இதையடுத்து மெல்ல மெல்லமாக தனது கெரியரில் முன்னேறி வந்த சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார். இவரது நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாவீரன் மற்றும் அயலான் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பின் கீழ் சிவகார்த்திகேயன் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில், சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னே ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது குழந்தை குகன் தாஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்தார்.

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் தனது அக்காவுடன் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்….