‘உன் நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை’… உருக்கமான பதிவு வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… யாரை நினைத்து தெரியுமா?…

 

தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் .தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடிப்பில் உருவான இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தற்போது திரையுலகை கலக்கி வரும் அனிருத் அறிமுகமானார் .

   

3 படம் கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்தனர். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் .

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் அவ்வப்பொழுது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டி வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுசை காதலித்து  திருமணம் செய்து கொண்டதும், தற்பொழுது இருவரும் பிரிந்து வாழ்வதும் நாம் அனைவரும் அறிந்ததே.

இவர்களது பிரிவை தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மறைந்த பாட்டியின் நினைவு நாளை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…