மாஸாக வெளிவந்த கமலஹாசனின் 233 வது படத்தின் டீசர்… இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன்.  இயக்குனர் யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.  ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

   

இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில்  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது 233 வது திரைப்படத்திற்கான கதை தேர்வுகளில் இறங்கினார்.

இதனைத் தொடர்ந்து பல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்று பல செய்திகள் வெளி வந்தாலும் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சமீபத்தில் வெளிவந்த துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கிய எச்.வினோத் உடன் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதைப்போலவே கமல்ஹாசன் மற்றும் எச் வினோத் ஆகியோரின் கூட்டணி முடிவாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின்  அறிமுக டீசர் என்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மாஸாக வெளிவந்த இந்த டீசர் தற்பொழுது ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)