‘ஆதி முதல் அந்தம் வரை அத்தனையும் நீயே நீயே’… கணவர் நவீன்குமாரின் பிறந்தநாளுக்காக தானே எழுதிய பாடிய பாடலை கண்மணி… வைரல் வீடியோ…

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களும் தற்பொழுது பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி.இவர் ஜெயா டிவியில் நியூஸ் ரீடராக தனது பயணத்தை தொடங்கினார்.

   

 

இதைத்தொடர்ந்து நியூஸ் 18, காவிரி என பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது சன் டிவியில் பணியாற்றி வருகிறார். இவர் கண்மணி சீரியல் நடிகர் நவீனை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். நடிகர் நடிகர் நவீன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்.

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் இவர் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணத்தை தொடர்த்தும் இவர் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து கொண்டு தான் வருகிறார்.

சமீபத்தில் இவர் தன் கர்ப்பமாக இருக்கும் தகவலை க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்தார். சமீபத்தில் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இவர் தற்பொழுது தனது கணவரின் பிறந்த நாளுக்காக அவருக்காக பாடல் ஒன்றை எழுதி அதனை தானே பாடியும் உள்ளார். இந்த பாடலானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அவரே வெளியிட்ட வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Radhika s (@imkanmaninavinkumar)