‘லால் ஸலாம்’ மியூசிக் மேக்கிங் வீடியோவை  பகிர்ந்த ஏ ஆர் ரஹ்மான்… அருகிலிருந்து மெய் மறந்து ரசிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…

சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படம் ‘லால் ஸலாம்’. இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘ லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.


மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

   

இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் ஷூட்டிங் ஸ்பாட்  வீடியோ வெளியாகி வைரலானது.

தற்போது, ’லால் சலாம் படத்திற்காக இசையமைக்கும் வீடியோ ஒன்றை, ஏ.ஆர்.ரகுமான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எ.ஆர்.ஆர் ஹார்மோனிய பெட்டியை வாசிக்கும் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதனை அருகில் அமர்ந்து ரசிக்கிறார். தற்பொழுது இந்த விடியோவானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…