LIC படத்திற்காக சிங்கப்பூருக்கு சென்ற குழு.. அங்கிருந்து தப்பியோடிய சம்பவம்.. ஏன் தெரியுமா.?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்தவர் அவர் இயக்கிய லவ் டுடே திரைப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருந்தார். அத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

   

இன்றைய தலைமுறையினரின் காதல் எப்படி இருக்கும்? என்பதை நகைச்சுவை கலந்து காண்பித்திருந்தார்கள். அத்திரைப்படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்து விட்டது. தற்போது, எஸ் ஜே சூர்யா, யோகி பாபு மற்றும் கீர்த்தி செட்டி ஆகியோரை வைத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி என்ற திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார்.

அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் 30 நாட்கள் நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், அத்திரைப்படம் அங்கு அவ்வளவு நாட்கள் எடுக்கப்படவில்லையாம். அங்கு அதிகம் செலவானதால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மலேசியாவிற்கு சென்றுவிட்டார்களாம்.

இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருப்பதாவது, எல்ஐசி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சிங்கப்பூரில் ஒரு மாதம் நடப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு, 15 நாட்கள் நடக்கப் போவதாக சொன்னார்கள். தற்போது நான்கு நாட்கள் மட்டுமே அங்கு படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பட்ஜெட்டை குறைப்பதற்காக மலேசியாவிற்கு சென்று  படபிடிப்பை நடத்தியுள்ளனர் என்று கூறியிருக்கிறார்.