அங்க ஒரு கால் இங்க ஒரு கால்.. விஜய்க்கு வந்த சோதனை.. தளபதி-69 படத்துக்கு என்ன தான் ஆச்சு..?

தமிழில் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் விஜய் திடீரென்று அரசியலில் களமிறங்கி விட்டார். அவரின் தொண்டர்கள் தீவிர அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வரும் 2026 ஆம் வருடத்திற்கான சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

   

தற்போது கோட் திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் பங்கேற்று வரும் தளபதி விஜய், தன் 69 வது திரைப்படத்திற்காக இயக்குனரை தற்போது வரை தேர்ந்தெடுக்கவில்லை. வழக்கமாக விஜய் தன் படத்தின் 50% படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும், அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்ந்தெடுவிடுவார்.

ஆனால், தற்போது அவர் அப்படி செய்யவில்லை. இந்நிலையில், தன் 69-ஆவது திரைப்படத்தின் இயக்குனரை தேர்ந்தெடுப்பதில் விஜய் குழம்பி வருவதாக வலைப்பேச்சு பிஸ்மி தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, தளபதி 69 வது திரைப்படம் குறித்து பல தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இயக்குனர் யார்? என்று தெரியவில்லை. அதில், பல குழப்பங்கள் உள்ளது. மேலும், விஜய் 60 நாட்களுக்குள் திரைப்படத்தை முடித்துவிடுமாறு கேட்டுக் கொண்டாராம். தன்னிடம் கதை கொண்டு வரும் இயக்குனர்களிடம், தற்போது திரைப்படத்தை எடுத்து முடித்துவிட்டு வாருங்கள். அதன் பிறகு பண்ணலாம் என்று கூறுகிறாராம்.

அரசியலிலும் முழுமையாக ஈடுபட முடியாமல், திரைப்படத்தையும் பாதியில் விட முடியாமல் அவர் குழம்பிக் கொண்டிருக்கிறார் என்று வலைப்பேச்சு பிஸ்மி தகவல் தெரிவித்திருக்கிறார்.