முகங்களை மறைத்து….. நெஞ்சோடு அணைத்து குழந்தைகளுடன் ஏர்போர்ட்டிற்கு நயன்-விக்கி….. தோளில் சுகமான தூக்கம் ….

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

   

ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து பல முன்னணி ஹீரோவுடன் ஜோடி போட்டு நடித்து புகழ்பெற்றார்.

பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்தார்.

அதாவது இவர்களுக்கு 5 மாதத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இவர்கள் வாடகைத்தாய் முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

இது தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்த நிலையில் அதற்கும் இவர்கள் விளக்கம் அளித்தனர் நயன்தாரா. தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அட்லீ இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் . வரும் ஜூன் மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ்-ஆக உள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் தொடர்ந்து சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன் காரணமாக நயன்தாரா கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மும்பையில் தங்கி இருந்து படபிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்

இது குறித்த பல புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

அதற்காக மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது இரட்டை குழந்தைகளுடன் ஏற்பாட்டுக்கு வந்திருந்தனர்.

ஆனால் அவர்களின் முகத்தை யாருக்கும் தெரியாத அளவுக்கு மறைத்து தூக்கி வந்தனர். இருப்பினும் வீடியோக்கள் எப்படியாவது இவர்களின் முகத்தை படம் பிடித்து விட வேண்டும் என்று சுற்றி சுற்றி வந்தனர்.

ஆனால் அந்த குழந்தைகள் தங்களது பெற்றோர்களின் தோல்களில் தூங்கிக் கொண்டிருந்தது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.